திருச்சி: மிரட்டும் வாசகத்துடன் சுவரொட்டி அச்சடித்த 5 பேர் கைது

திருச்சி: மிரட்டும் வாசகத்துடன் சுவரொட்டி அச்சடித்த 5 பேர் கைது
X

மிரட்டும் வாசகத்துடன் திருச்சியில் ஒட்டப்பட்டிருந் போஸ்டர்.

திருச்சியில் விரைவில் என்ற வாசகத்துடன் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி அச்சடித்த 5-பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி கொட்டப்பட்டு எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ் (வயது 24) இவர் கடந்த 15-ஆம் தேதி பொன்மலைப்பட்டி கடைவீதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுசம்பந்தமாக மறுநாள் 16-ஆம் தேதி கொலை செய்யப்பட்ட சின்ராஜின் நண்பர்கள் சார்பில் பொன்மலை, பொன்மலைப்பட்டி, கல்கண்டார்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டது.

அதில் இன்று இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து புறப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அதை அடுத்த வாசகத்தின் கடைசியாக விரைவில்…. என்ற வார்த்தை அச்சிடப்பட்டிருந்தது. இந்த விரைவில் என்ற வார்த்தை பழிக்கு பழி என்ற வாசகமாக கருதப்பட்டது. இந்தப் போஸ்டரை படித்த மண்ணச்சநல்லூரை சேர்ந்த சார்லஸ் (வயது 46) என்பவர் பொன்மலைப்பட்டியில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார்.

இந்த வாசகத்தைக் குறித்து இது மாதிரி வாசகம் அச்சடிக்கப்பட்ட போஸ்டரை ஒட்டி இருக்கிறீர்களே பிரச்சனை எதுவும் வராதா என்று போஸ்டர் ஒட்டிய நபர்களான இறந்த சின்ராஜின் அண்ணன் கொட்டப்பட்டு ஜே.ஜே. நகரை சேர்ந்த ரமேஷ் (வயது 26), பொன்மலைப்பட்டி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த ஜோஸ்வா (வயது 20), இவரது அண்ணன் டார்வின் (வயது 23), சுப்ரமணியபுரம் ஜெய்லானியா தெருவை சேர்ந்த நந்தா (வயது 23), கல்லுக்குழி முடுக்குபட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 23) ஆகியோரிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்கள் 5 பேரும் சேர்ந்து சார்லசுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சார்லஸ் பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ரமேஷ், ஜோஸ்வா, டார்வின், நந்தா, மணிகண்டன் ஆகிய 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தக் கொலை வழக்கில் நேற்று முன்தினம் சின்ராஜை கொலை செய்த 3 பேரை பொன்மலை போலீசார் கைது செய்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai solutions for small business