திருச்சியில் 41/2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது

திருச்சியில் 41/2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது
X

திருச்சியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  ரேஷன் அரிசி மூட்டைகள்

திருச்சியில் 41/2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி அரியமங்கலம் காட்டூர் பகுதியில் ஒருவர் ரேஷன் அரிசி கடத்தி வைத்திருப்பதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர்விவேகானந்தன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்அலாவுதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குசென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில்உள்ள ஒரு குடோனில் இஸ்மாயில் (வயது 40) என்பவர் சுமார் 41/2 டன் ரேஷன் அரிசியை மூட்டை, மூட்டையாகபதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.

விசாரணையில் இஸ்மாயில் அந்த பகுதியைசுற்றிலும் உள்ள பொதுமக்களிடம் இருந்து ரேஷன்கடைகளில் இருந்து வாங்கிய அரிசியை விலை கொடுத்து வாங்கி அதைனை வெளியில் கடத்தி அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவரைகைது செய்த போலீசார்ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர்அவர்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மணப்பாறை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!