திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்

திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்
X

டாஸ்மாக் மது பான கடை (கோப்பு படம்)

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் மூலம் நடத்தப்படும் 185 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மூடப்பட வேண்டும் என்பது அரசு விதி முறையாகும்.

டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுக்கூடங்கள் (பார்) நடத்துவதற்கு அனுமதி இல்லை. டாஸ்மாக் கடைகள் தவிர பிற அனுமதிக்கப்படாத இடங்களில் மதுபானங்கள் விற்றதாக மாவட்டத்தில் காவல்துறையினர் 93 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது பான வகைகளை தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்குத்தான் விற்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதலான விலைக்கு விற்றதாக திருச்சி மாவட்டத்தில் ஒரு மேற்பார்வையாளர் மற்றும் 3 விற்பனையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். '

தமிழ்நாடு வாணிப கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai solutions for small business