திருச்சியில் வியாபாரியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 4 பேர் கைது

திருச்சியில் வியாபாரியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 4 பேர் கைது
X
பொன்மலை போலீஸ் நிலையம்
திருச்சியில் வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்ற 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி பொன்மலைப்பட்டியை சேர்ந்தவர் முகமது அப்துல் காதர் (வயது 53). இவர் அந்த பகுதியில் செருப்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று காலை பொன்மலைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் அருகே முகமது காதர் நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக வந்த மேலகல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த இளவரசன் (வயது 29), பொன்மலை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த ராஜா என்கிற கோப்பு ராஜா (வயது 26), பொன்மலைப்பட்டி மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்த தங்கமணி என்கிற டேஞ்சர் மணி (வயது 32), மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தா நகரை சேர்ந்த ராம்குமார் (வயது 32) ஆகிய 4 பேரும் சேர்ந்து முகமது அப்துல் காதரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் ஆயிரம் பறித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து முகமது அப்துல் காதர் பொன்மலை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!