2 ஆண்டாக பூட்டி இருந்த சாலையை திறந்த அமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி

2 ஆண்டாக பூட்டி இருந்த சாலையை திறந்த அமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி
X

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே இரண்டு ஆண்டுகளாக பூட்டி இருந்த சாலை தற்போது திறக்கப்பட்டு உள்ளது.

துவாக்குடி பகுதியில் 2 ஆண்டாக பூட்டி இருந்த சாலையை திறந்த அமைச்சர் அன்பில் மகஷே் பொய்யாமொழிக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட, துவாக்குடி நகராட்சி வியாபாரிகள் மற்றும் அதை சுற்றியுள்ள குடியிருப்புகளில் வாழும் பொதுமக்கள் பெல்- ஊரகத்தை ஒட்டியுள்ள அக்பர் சாலை நுழைவு வாயிலினை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும்,

இதன் மூலம் வணிகர்கள், பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் மனு அளித்தனர்.

பொதுமக்கள் அளித்த மனுவின் அடிப்படையில், பெல் பொது மேலாளரிடம் அமைச்சர் நேரில் சந்தித்து பேசியதன் விளைவாக 13-11-2021 இன்று முதல் அக்பர் சாலை நுழைவு வாயில் வழக்கம்போல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர் . அமைச்சருக்கு பகுதி மக்கள் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Next Story
ai in future agriculture