திருச்சி-தஞ்சை சாலையில் கார் மோதியதில் 2 பெண் போலீசார் காயம்

திருச்சி-தஞ்சை சாலையில் கார் மோதியதில் 2 பெண் போலீசார் காயம்
X
திருவெறும்பூர் அருகே திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத கார் மோதியதில் 2 பெண் காவலர்கள் காயமடைந்தனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள செல்வபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் சத்யா தேவி (36), திருவெறும்பூர் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி மணிமேகலை (36) இவர்கள் இருவரும் பெல் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகின்றனர்,

இந்த நிலையில் நேற்று இரவு சத்யாதேவியின் இருசக்கர வாகனத்தில் மணிமேகலையும் பணிக்கு சென்ற பொழுது பெல் ட்ரெய்னிங் சென்டர் அருகே திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சத்யா தேவியும், மணிமேகலையும் காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இச்சம்பவம் குறித்து பாய்லர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து அடையாளம் தெரியாத மர்ம காரை தேடி வருகின்றனர்.

இரண்டு பெண் காவலர்கள் மீது அடையாளம் தெரியாத கார் மோதி காயமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!