ஜல்லிக்கட்டு போட்டி செலவை ஏற்பேன் : திருவெறும்பூர் அதிமுக வேட்பாளர் குமார் உறுதி

ஜல்லிக்கட்டு போட்டி செலவை ஏற்பேன் : திருவெறும்பூர் அதிமுக வேட்பாளர் குமார் உறுதி
X
திருவெறும்பூர் தொகுதியில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியின் செலவை நான் ஏற்பேன் என்று அதிமுக வேட்பாளர் குமார் தெரிவித்தார்.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் குமார் தீவிர பிரசாரம் செய்து வருகிறார், இன்று நடத்த பிரசாரத்தின் போது அவர் கூறியதாவது. திருவெறும்பூர் தொகுதியில் தமிழக பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடந்து வந்த கிராமங்கள் அனைத்திலும் தொடர்ந்து ஜல்லிகட்டு நடத்திட வழிவகை செய்வேன்.

எனது தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடு செலவுகளை நானே ஏற்பேன். மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவு கூறும் வகையில் திருவெறும்பூர் தொகுதியில் வீரருடன் கூடிய ஜல்லிக்கட்டு காளை சிலை அமைக்கப்படும் இவ்வாறு அவர் கூறுதியளித்தார்.



Tags

Next Story
ai solutions for small business