அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் திருக்குறள் கரும்பலகை வைக்கவேண்டும் -ஜனநாயக ஜனதாதளம் கோரிக்கை
தமிழக அரசு சார்ந்த அலுவலகம், பள்ளி, கல்லூரிகளில் தினம் ஒரு குறள் கரும்பலகை வைத்திட வேண்டும் என்று ஜனநாயக ஜனதாதளம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஜனநாயக ஜனதா தளம் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் ராபர்ட் கிறிஸ்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த வகையில் தமிழ் தெய்வீக புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் நூலை தேசிய நூலக அறிவிக்க பிரதமரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இதன் மூலம் அவருக்கு திருக்குறள் மீது இருக்கும் பாசத்தையும், விருப்பத்தையும் நாடறிய செய்துள்ளது.
தமிழ்நாட்டின் திருக்குறள் நூலின் குறளும் உலக பொதுமறையான நீதியை உணர்த்திடும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு சார்ந்த அனைத்து அலுவலகம், பள்ளி, கல்லூரிகளில் தினம் ஒரு குறள் விளக்கும் கரும்பலகையை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இது குறித்த சுற்றறிக்கையை அரசு அலுவலங்கங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி செயல்படுத்திட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ராபர்ட் கிறிஸ்டி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu