திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பிரச்சனை: கலெக்டரிடம் மனு

திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பிரச்சனை: கலெக்டரிடம் மனு
X
திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பறக்கும் பாலம் அமைக்க கோரி வியாபாரிகள், பொதுமக்கள் கலெக்டரிடம் இன்று மனு அளித்தனர்.

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான 14.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கூடுதல் சர்வீஸ் சாலை அமைப்பதற்காக சாலையின் இருபுறத்திலும் கடைகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள், தொழிற்கூடங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்போதைய மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த டி.ஆர் பாலு அவர்களிடம் மனு அளித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன்படி சாலை போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தஞ்சை சாலை ஓசூரில் துவங்கி கரூர் சாலை ஜீயபுரம் வரை அரைவட்ட சுற்றுச் சாலை அமைக்கும் பணி 70% நிறைவு பெற்று ‌கூடிய விரைவில் இந்த சேவை பயன்பாட்டுக்கும் வரும் நிலையில், பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை போக்குவரத்து நெருக்கடி முற்றிலும் குறைந்து விடும். ஆனால் ஒரு தரப்பினர் சாலையை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி திருச்சி பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சாலை விரிவாக்கப் பணிகளுக்காக ஆயிரக்கணக்கான கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை தடுத்து, அப்பகுதியில் மாற்று ஏற்பாடாக உயர்மட்ட பறக்கும் பாலம் அமைக்க கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!