திருச்சியில் முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது

திருச்சியில் முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது
X
திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி சூரியூரில் இன்று தொடங்கியது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஆண்டுதோறும் தை இரண்டாம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு தொடர் மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியானது இன்று காலை தொடங்கியது. இதில் 450 மாடுபிடி வீரர்களும் 550 காளைகளும் பங்கேற்றுள்ளன. திருச்சி வருவாய் கோட்டாச்சியர் விஸ்வநாதன் உறுதிமொழி வாசிக்க, முன்னாள் எம்.பியும், அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனைதொடர்ந்து அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு காளைகளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விட்டனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் பாதுகாக்கும் வண்ணம் 650 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையில், ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடையும் வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க 7 மருத்துவர்கள் உட்பட 37 பேர் பணியில் ஈடு்பட்டுள்ளனர்.

Tags

Next Story
Will AI Replace Web Developers