திருச்சி: குடும்பத்துடன் தற்கொலை செய்ய ஆற்றில் குதித்த தொழிலாளி மாயம்

திருச்சி: குடும்பத்துடன் தற்கொலை செய்ய ஆற்றில் குதித்த தொழிலாளி மாயம்
X
திருச்சியில் குடும்பத்துடன் தற்கொலை செய்ய ஆற்றில் குதித்த தொழிலாளி மாயமானார். மனைவி, 2 மகள்கள் தப்பினர்

திருச்சி பாலக்கரை பீமநகர் நடுசெட்டி தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 47). தொழிலாளி. இவரது மனைவி அழகுமீனா (வயது 40). இந்த தம்பதிக்கு 12 மற்றும் 4 வயதில் 2 மகள்கள் உள்ளனர். நாகராஜுக்கு சரிவர வேலை இல்லை. இதனால் கடன் வாங்கி குடும்பம் நடத்தினார். இதில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தனர்.

இதனால் விரக்தியடைந்த நாகராஜ் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதற்கு மனைவி அழகுமீனாவும் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மனைவி, மகள்களுடன் பஸ் ஏறி நம்பர் 1 டோல்கேட் வந்த நாகராஜ், அங்கிருந்து நடந்து கொள்ளிடம் ஆற்று பாலத்துக்கு வந்தனர். பின்னர் ஆற்றில் குதிக்க முடிவு செய்து முதலில் நாகராஜ் குதித்துள்ளார். இதை பார்த்து பயத்தில் உறைந்து போன அழகுமீனா, அவர்களது மகள்கள் அழுதபடி நின்றனர்.

பின்னர் ஆற்றில் குதிக்க முயன்றவர்களை அந்த வழியே நடை பயிற்சி வந்தோர் பிடித்து தடுத்தனர். பின்னர் ஸ்ரீரங்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவர்களை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். நீரில் அடித்து செல்லப்பட்ட நாகராஜை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!