ஸ்ரீரங்கத்தில் அடையாளம் தெரியாத பெண் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

ஸ்ரீரங்கத்தில் அடையாளம் தெரியாத பெண் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
X
ஸ்ரீரங்கத்தில் அடையாளம் தெரியாத பெண் உடலை கைப்பற்றி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி ஸ்ரீரீரங்கம் ராகவேந்திரா ஆர்ச் அருகில் அடையாளம் தெரியாத சுமார் 75 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் ஒன்று கிடந்தது. இது குறித்து வெள்ளி திருமுத்தம் கிராம நிர்வாக அதிகாரி ஹரிகிருஷ்ணன் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலைமையிலான போலீசார் இறந்து கிடந்த பெண் பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத அந்தப் பெண் யார் ? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் ? எப்படி இறந்தார் ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!