திருச்சி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் உயிரிழப்பு

திருச்சி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் உயிரிழப்பு
X

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி இறந்த வசந்தா.

திருச்சி அருகே கோப்பு கிராமத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் மின்சாரம் தாக்கி பலியானார்.

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள கோப்பு கீழத்தெருவை சேர்ந்தவர் வசந்தா (வயது 65). இவரின் கணவர்பழனிவேல் இறந்து விட்டார்.வாழைப்பழ வியாபாரம் செய்து வரும் வசந்தாவிற்கு 4 மகள்கள், 3மகன்கள் உள்ளனர். இந்நிலையில்இன்று காலை இயற்கை உபாதைக்காக அவர் வீட்டில் இருந்து எழுந்து வெளியே சென்றுள்ளார்.அப்போது பஞ்சாயத்து தெருவிளக்குகள் எரிய வில்லை.

இதனால் இருட்டில் சென்ற அவரால் அங்கு அறுந்து கிடந்த மின்சார கம்பியை கவனிக்கமுடியவில்லை. இதன் காரணமாக அவர் மின்சார கம்பியை மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த சோமரசம்பேட்டை போலீசார் வசந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். இதுபற்றி ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!