திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஜோதிடரால் ஏமாற்றப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஜோதிடரால் ஏமாற்றப்பட்ட  பெண் தூக்கிட்டு தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட சுகந்தி

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஜோதிடரால் ஏமாற்றப்பட்ட விரக்தியில் இருந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன். பெயிண்டரான ஜெகனுக்கும் ஸ்ரீரங்கம் பாரதி தெருவைச் சேர்ந்த சுகந்தி (வயது 26) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. சுகந்தி குழந்தையுடன் தனது தாய் வீட்டில் இருந்தார். அவரை பார்ப்பதற்காக ஜெகன் அங்கு வந்திருந்தார்.

அப்போது அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க மர்மநபர் தன்னை ஜோதிடர் என கூறியுள்ளார். பின்னர் அந்த நபரிடம் அவர்களது குடும்பம் நலன் குறித்து குறி கேட்டுள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்திய அந்த நபர் சோலிகளை உருட்டி பார்த்துள்ளார். பின்னர் இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அந்த நபர் சுகந்தியின் கணவருக்கும், குழந்தைக்கும் பெரிய ஆபத்து ஏற்பட உள்ளது. எனவே பரிகார பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு அவர்கள் இருவரும் சம்மதித்து உள்ளார்.

பின்னர் சுதந்தி அணிந்து இருந்த நகைகளை கழற்றி தருமாறும் பூஜை செய்துவிட்டு திருப்பித் தந்து விடுவதாக அந்தநபர் கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பி ஜெகன் மனைவி அணிந்திருந்த தாலி, கம்மல், மோதிரம் உள்ளிட்ட ஒன்றரை பவுன் நகைகளை கழற்றி கொடுத்துள்ளார். அதை பெற்றுக்கொண்ட அந்த நபர் ஒரு சொம்பு தண்ணீரில் புளியை கரைத்து எடுத்து வரச் சொல்லி அதற்குள் நகையை போட்டு மஞ்சள் துணியால் கட்டி மந்திரங்களைக் கூறி உள்ளார். இந்தத் துணியை மறு நாள் தான் பிரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் கணவன் மனைவி இருவரையும் முச்சந்திக்கு சென்று மூன்று சூடம் ஏற்றி வருமாறு கூறியுள்ளார். உடனே இருவரும் முச்சந்திக்கு சென்று சூடம் ஏற்றி விட்டு வந்துள்ளனர். வீட்டில் வந்து பார்த்த போது அந்த நபர் இல்லாததை கண்டு சந்தேகமடைந்த ஜெகன் செம்பினுள் பார்த்தபோது நகைகள் இல்லை. உடனே அக்கம் பக்கத்தில் சென்று தேடிப் பார்த்தபோது அவர் நகைகளுடன் தப்பி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சுகந்தி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசி.டி.வி. கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தனது அறியாமையால் நகைகளை பறி கொடுத்து விட்டோமே என்ற விரக்தியில் சுகந்தி இருந்து வந்துள்ளார். மேலும் சரியாக சாப்பிடாமலும், யாருடனும் பேசாமல் இருந்த சுகந்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நட.த்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!