திருச்சியில் குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி

திருச்சியில் குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி
X
திருச்சியில் குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது35). கூலித்தொழிலாளியான இவருக்கும், இவரது மனைவி திவ்யா (வயது 33) என்பவருக்கும் திருமணமாகி ஆகி 12 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த திவ்யா சம்பவத்தன்று தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அப்போது வலி தாங்காமல் அலறி துடித்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு திவ்யாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திவ்யாவின் புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!