புலிவலம் ஆதரவற்ற முதியோர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய போலீசார்

புலிவலம் ஆதரவற்ற முதியோர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய போலீசார்
X

ஆதரவற்ற முதியோருக்கு, நிவாரண பொருட்களை வழங்கிய போலீசார். 

புலிவலம் பகுதியில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு, ஜீயபுரம் போலீசார் நிவாரண உதவிகள் வழங்கினர்.

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட புலிவலம் பகுதியில் உள்ள ஜெயலட்சுமிக்கும், கொடியாலத்தில் உள்ள நாகம்மாள் ஆகிய இரண்டு ஆதரவற்ற முதியோர்களுக்கு, ஜீயபுரம் காவல் நிலையம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

அதன்படி, இவர்களுக்கு அரிசி, பிஸ்கட் பாக்கெட்கள் போன்றவை வழங்க ஏற்பாடு செய்யபட்டது. இதை தொடர்ந்து ஜீயபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார், ஆதரவற்ற முதியோர்களின் வீட்டிற்கே நேரில் சென்று அரிசி, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை வழங்கி, அவர்களின் தேவைகளை கேட்டறிந்து ஆறுதல் கூறினர்.போலீசாரின் இச்செயலை, பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு