திருச்சி அருகே பள்ளிக்குள் நுழைந்து வன்முறை: 8 பேர் மீது வழக்குப்பதிவு

திருச்சி அருகே பள்ளிக்குள் நுழைந்து வன்முறை:  8 பேர் மீது வழக்குப்பதிவு
X

பைல் படம்.

திருச்சி அருகே பள்ளிக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருச்சி அருகே உள்ள இனாம்குளத்தூரில் ஹாஜியார் யூசுப் முகமது மேல் நிலைப்பள்ளி பிளஸ்டூ மாணவியிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதாக ஆங்கில ஆசிரியர் முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்குள் நுழைந்து, தகாத வார்த்தையில் பேசியதோடு, இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜா (வயது 59) என்பவர் இனாம் குளத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், அப்பகுதியை சேர்ந்த 17 வயது நிரம்பிய 5 பேர் மற்றும் புஷ்பராஜ் (வயது 21), மகாமுனி (வயது 19), சிவா (வயது 19) ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story
குமாரபாளையத்தில் அத்துமீறிய சாயப்பட்டறைகள் மீது அதிரடி நடவடிக்கை - சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு