ஸ்ரீரங்கம்: விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீரங்கம்: விஸ்வ ஹிந்து பரிஷத்,  பஜ்ரங்தள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
X

விசுவ ஹிந்து பரிஷித் மற்றும் பஜ்ரங்தள் சார்பி, அம்மா மண்டபம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

காஷ்மீரில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

காஷ்மீரில் தொடர்ந்து ஹிந்துக்களை படுகொலை செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில், விசுவ ஹிந்து பரிஷித் மற்றும் பஜ்ரங்தள் சார்பாக இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட பஜ்ரங்தள் அமைப்பாளர் ஸ்ரீ ஆனந்த் தலைமை தாங்கினார். ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட செயலாளர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயல் தலைவர் சுதாகர் திலக், கோட்ட செயலாளர் தர்மராஜ் ஆகியோர், கண்டன உரை ஆற்றினார்கள். ஸ்ரீரங்கம் பிரகண்ட தலைவர் கோபு நன்றி கூறினார். இதில் விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!