ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி இராப்பத்து உற்சவத்தின் 3-ம் நாள் நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி இராப்பத்து உற்சவத்தின் 3-ம் நாள் நிகழ்ச்சி
X
ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா இராப்பத்து உற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதித்தார்.
ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி ராப்பத்து உற்சவத்தின் 3-ஆம் நாள் ஸ்ரீ நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சேவை சாதித்தார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழா கடந்த 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து ராப்பத்து உற்சவத்தின் 3-ஆம் நாளான இன்று நண்பகல் 12 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு நாழி கேட்டான் வாசல், ராஜ மகேந்திரன் சுற்று வழியாக சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் வந்தடைந்து, பகல் 1 மணிக்கு பரமபத வாசலை கடந்தார்.

பின்னர் ஆயிரங்கால் மண்டபம் செல்லும் வழியில் உள்ள மணல்வெளியில் ஆழ்வார் மரியாதை கண்டு, திருமாமணி மண்டபத்தில் நீள்முடி கிரீடம், ரத்தின அபய ஹஸ்தம், திரு ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்..

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!