ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா பகல் பத்து 4-ம் நாள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா பகல் பத்து 4-ம் நாள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுந்த ஏகாதசி விழா பகல் பத்து உற்சவத்தின் நான்காம் நாளான இன்று ஸ்ரீ நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

*ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : வைகுந்த ஏகாதசி பகல் பத்து இன்று 4- ம் நாள்.

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோகம் வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலின் வைகுந்த ஏகாதசி விழா கடந்த சனிக்கிழமை திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது.. பகல் பத்து, ராப்பத்து என 21 நாட்கள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி பகல் பத்து 4- ம் நாளான இன்று (07.12.2021) ஸ்ரீ நம்பெருமாள் தொப்பாரைக் கொண்டை, இரத்தின அபயஹஸ்தம், வைர காதுகாப்பு, முத்துச்சரம், காசு மாலை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்தார்.

அதனை தொடர்ந்து நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தனுர் லக்னத்தில் புறப்பட்டு பகல் பத்தான அர்ஜூன மண்டபத்திற்கு சென்றடைந்தார். அங்கு நம்பெருமாளுக்கு அரையர் சேவையுடன் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ரங்கா ரங்கா என கோஷமிட்டனர்.

Tags

Next Story