/* */

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

வைகுந் ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
X

வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும், 108வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதாக திகழும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில் மார்கழி மாதம்நடைபெறும் வைகுந்த ஏகாதசி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்த ஆண்டுக்கான வைகுந்த ஏகாதசி திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந்தேதி முதல்24-ந்தேதி வரைநடைபெற உள்ளது. பகல் பத்து,ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21நாட்கள் இந்த விழா நடைபெறும்.இதற்கான முகூர்த்தக்கால் நடும்விழா இன்று காலை ஆயிரங்கால் மண்டபம் அருகே நடைபெற்றது.

இந்த விழா 3-ந் தேதி பகல்பத்து உற்சவத்துடன் திருவிழா துவங்குகிறது.தொடர்ந்து 13-ந்தேதி நாச்சியார்திருக்கோலம் எனப்படும் மோகினிஅலங்காரத்தில் நம்பெருமாள்அருள்பாலிக்கிறார்.14-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின்முதல் நாள் வைகுண்ட ஏகாதசிதிருநாள் ஆகும். அன்றுசொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிநடைபெறுகிறது. அன்றைய தினம்அதிகாலை 3.30மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்துபுறப்பட்டு நம்பெருமாள் அதிகாலை4.45 மணிக்கு மேல் பரமபத வாசல்எனப்படும் சொர்க்க வாசலில் எழுந்தருள்வார். அப்போது நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்வார்.

20-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறிநிகழ்ச்சியும், 21-ந்தேதி தீர்த்தவாரியும், 23-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது. அன்றுடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவுபெறுகிறது. வைகுண்டஏகாதசியன்று அதிகாலை 4.45 மணி முதல் இரவு 10.00 மணி வரைசொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும்.

இந்நிகழ்ச்சி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோயில் உதவி ஆணையர் கந்தசாமி, உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், மேலாளர் உமா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Nov 2021 11:13 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்..!
  2. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  3. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  4. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  5. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  6. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  7. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!