ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் உறியடி உற்சவம்

ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோயிலில்   உறியடி  உற்சவம்
X
ஸ்ரீரங்கம் நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் உறியடி உற்சவம் நடை பெற்றது.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் கிருஷ்ண ஜெயந்தி விழாவும் ஒன்றாகும். இந்த விழாவையொட்டி நேற்று காலை கிருஷ்ணன் புறப்பாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து உத்தரவீதிகளில் ஸ்ரீ கிருஷ்ணன் எண்ணெய் விளையாட்டு கண்டருளினார். பின்னர் சன்னதியை அடைந்தார். மாலையில் நம்பெருமாள். உபயநாச்சியார்கள் மற்றும் கிருஷ்ணருடன் திருச்சிவிகையில் புறப்பட்டார்.

கருடமண்டபத்தில் எழுந்தருளிய கிருஷ்ணர், நம்பெருமாள் உறியடி உற்சவம் கண்டருளினர். பின்னர் இரவு நம்பெருமாள் மூலஸ்தானத்தை அடைந்தார் .கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைப்படி பக்தர்கள் இந்த உறியடி உற்சவகத்தை காண அனுமதிக்கப்படவில்லை. கடந்த ஆண்டும் இதே போல் பக்தர்கள் இன்றிதான் உறியடி உற்சவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!