உறையூர் நாச்சியார் கோவிலில் இன்று நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவை

உறையூர் நாச்சியார் கோவிலில் இன்று நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவை
X

திருச்சி உறையூர் நாச்சியார் கோவிலில் சேர்த்தி சேவையில் நம்பெருமாள்- கமலவல்லி தாயார்.

உறையூர் நாச்சியார் கோவிலில் இன்று நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆடி பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனி தேர் திருவிழா கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து உற்சவர் நம்பெருமாள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

இந்த விழாவின் போது வருடத்திற்கு ஒருமுறை மட்டும் உற்சவர் நம்பெருமாள் உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் எழுந்தருளி கமலவல்லி தாயாருடன் சேர்த்தி சேவை சாதிப்பது வழக்கம்.அந்த வகையில் சேர்த்தி சேவைக்காக இன்று அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டார் நம்பெருமாள்.

வழிநெடுக வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 11 மணியளவில் உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில் வந்தடைந்தார். அங்கு அழகிய மணவாளப் பெருமாளாக காட்சி அளிக்கும் அவர் பிற்பகல் 2 மணிமுதல் தாயாருடன் சேர்த்தி சேவைக்காக எழுந்தருளினார்

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளையும் தாயாரையும் ஒருசேர கண்டு தரிசனம் செய்தார்கள். சேர்த்தி சேவை நிகழ்ச்சி இரவு 12 மணி வரை நடைபெறும். அதன் பின்னர் நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் ஸ்ரீரங்கம் செல்கிறார்

Tags

Next Story
ai in future agriculture