திருச்சி அருகே பள்ளி மாணவிகள் இருவர் மாயமானதாக போலீசில் புகார்

வீட்டை விட்டு வெளியேறிய மாணவிகள்
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் முத்தரசநல்லூர் கிராமம் கைகுடியைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகள் கண்மணி (வயது 17) என்பவர் உப்பிலியபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மற்றும் முருகேசன் மகள் நிவேதா (வயது 15) என்பவர் திருச்சி கே.கே.நகரில் உள்ள பெரியார் மணியம்மை மகளிர் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் வீட்டில் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு எங்கோ சென்று விட்டார்கள்.
இவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் தொலைபேசி எண் 9498100654 ஜீயபுரம் காவல் நிலையம், காவல் ஆய்வாளர் தொலைபேசி எண் 9498159981, சிறப்பு உதவி ஆய்வாளர் 9940930409 ஆகிய எண்ணிற்கு தொடர்பு கொள்ளும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu