திருச்சி சிறுகமணி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் வாழை பொருட்கள் கண்காட்சி

திருச்சி சிறுகமணி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் வாழை பொருட்கள் கண்காட்சி
X

திருச்சி அருகே உள்ள சிறுகனூர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை கலெக்டர் சிவராசு பார்வையிட்டார்.

திருச்சி அருகே சிறுகமணி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் வாழை சார்ந்த பொருட்கள் கண்காட்சி நடந்தது.

திருச்சி அருகே சிறுகமணியில் வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தின் சார்பில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் கிராமப்புற பெண்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது வாழை சாகுபடி பற்றியும், வாழை அறுவடைக்கு பின்னர் பிந்தைய தொழில்நுட்பத்தின் மூலம் வாழை சார்ந்த பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், அவற்றை சந்தைப்படுத்துதல் பற்றிய சமுதாயப்பணி பள்ளி பயிற்றுனர்களுக்கு பயிற்சி கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்தது.

இந்த கண்காட்சியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு இந்த கண்காட்சியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!