திருச்சியில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம்: அமைச்சர்கள் தொடக்கி வைப்பு

திருச்சியில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம்:  அமைச்சர்கள் தொடக்கி வைப்பு
X
தமிழகத்தில் கொரோனா தொற்றால் நோயாளிகளுக்கு வீடு தேடி மருந்துகள் வழங்கும் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.

திருச்சியில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் நோயாளிகளுக்கு வீடு தேடி மருந்துகள் வழங்கும் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கோவை, சென்னை, சேலம், மதுரை, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய 7 மவட்டங்களில் இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.

முதலாவதாக கோவையில், மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து சென்னை, சேலம், மதுரை, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், இன்று ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை ஒன்றியம், மொண்டிப்பட்டியில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அமைச்சர்கள் கே.என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கொடியசைத்து மக்களை தேடி மருத்துவம் எனும் வாகனத்தை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, எம்எல்ஏ-க்கள் இனிகோ இருதயராஜ், பழனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை-  நிறுவனங்களுக்கு அறிவுரை