திருச்சி முக்கொம்பு அணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம்

திருச்சி முக்கொம்பு அணையில்  பராமரிப்பு பணிகள்  தீவிரம்
X

திருச்சி முக்கொம்பு மேலணையில்  தீவிரமாக நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள்

திருச்சி முக்கொம்பு மேலணையில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து வருடந்தோறும் ஜீன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். இந்த தண்ணீர் கரூர் மாவட்டத்தில், மாயனூர் கதவணை, திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு தடுப்பணை ஆகியவற்றின் வழியாக, கல்லணைக்கு வருகிறது. அங்கிருந்து டெல்டா பாசனத்துக்கு, கல்லணை கால்வாய், வெண்ணாறு, கொள்ளிடம் ஆறு போன்றவற்றில் தண்ணீர் திறக்கப்படும்.

இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அணையில் திறக்கப்படும் தண்ணீர், மாயனுர், முக்கொம்பு அணைகள் வழியாக, 16ம் தேதி, கல்லணையை சென்றடையும்.

டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் கல்லணையில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வண்ணம் பூசும் பணிகள் முடிந்துள்ளது.

ஆனால், காவிரி ஆற்றில் வரும் 25 ஆயிரம் கனஅடி தண்ணீரை கல்லணைக்கு பிரித்துக் கொடுக்கும் முக்கொம்பு அணையில், ஷட்டர்கள் பராமரிப்பு பணி மேற்பட்ட நிலையில் வண்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பை பொருத்தவரை, கல்லணை தான் பிரதானமாக கருதப்படுகிறது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா