திருச்சி மாநகராட்சியுடன் இணைய கிராம சபை கூட்டத்தில் எதிர்ப்பு

திருச்சி மாநகராட்சியுடன் இணைய கிராம சபை கூட்டத்தில் எதிர்ப்பு
X

திருச்சி அருகே உள்ள அதவத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.

திருச்சி மாநகராட்சியுடன் இணைவதற்கு கிராம சபை கூட்டத்தில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

65 வார்டுகளாக உள்ள திருச்சி மாநகராட்சி 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.இதற்காக திருச்சி மாகரின் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 20 ஊராட்சிகள் திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட உள்ளன.

இதற்கு இந்த ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அதவத்தூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தினத்தன்று கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திரளான மக்கள் பங்கேற்று திருச்சி மாநகராட்சியுடன் அதவத்தூரை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் ம.ப. சின்ன துரையும் பங்கேற்றார்.

இதேபோல சோமரசம்பேட்டை, அல்லித்துறை, தாயனூர், மற்றும் வயலூர் ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் ஊர்த் தலைவர்கள் மற்றும் நாட்டாமைகள் தலைமை யில் ஊர்வலமாக திரண்டு வந்து திருச்சி மாநகராட்சியுடன் தங்கள் ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது பற்றி அந்தந்த கிராம சபைக் கூட்டங்களில் விவாதம் நடைபெற்றது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்