திருச்சி புலிவலம் உய்யக்கொண்டான் வாய்க்காலில் தூர் வாரும் பணி : முதல்வர் மு .க. ஸ்டாலின் ஆய்வு

திருச்சி புலிவலம் உய்யக்கொண்டான் வாய்க்காலில் தூர் வாரும் பணி : முதல்வர் மு .க. ஸ்டாலின் ஆய்வு
X

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், கொடியாலம் கிராமத்தில், நீர்வளத் துறை சார்பில், புலிவலம் மணற்போக்கி வடிகால் கால்வாயில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், எஸ்.எஸ்.சிவசங்கர், கலெக்டர் சிவராசு உள்ளிட்ட பலர் உள்ளனர்.

திருச்சி குழுமணி உய்யக்கொண்டான் வாய்க்காலில் புலிவலம் மணற்போக்கி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி கல்லணை கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலத்தை திறந்து வைப்பதற்காகவும், தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து காவிரி ஆற்றில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று திருச்சி வருகை புரிந்தார்.

கல்லணையில் 90.96 கோடி ரூபாய் செலவில் 1050 மீட்டர் நீளமுள்ள புதிய பாலத்தை திறந்து வைத்தார். மேலும் கல்லணையில் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து திறக்கப்பட்ட புது பாலம் வழியாக தஞ்சாவூர் சென்று தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது திருச்சி மாவட்ட உய்யக்கொண்டான் வாய்க்கால் பாசன விவசாயிகளின் கோரிக்கையின் படி கொடியாலம் மற்றும் புலிவளம் பகுதியில் உய்யக்கொண்டான் வாய்க்கால் 100 மீட்டர் முதல் 1200மீட்டர் வரை 29.70லட்சம் நிதி ஒதுக்கீட்டில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி 9 சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, பொதுப்பணித் துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil