திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் ஸ்ரீரங்கத்தில் ஆர்ப்பாட்டம்

திருச்சி வடக்கு மாவட்ட   அ.தி.மு.க.வினர் ஸ்ரீரங்கத்தில்  ஆர்ப்பாட்டம்
X

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் இன்று ஸ்ரீரங்கத்தில் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் ஸ்ரீரங்கத்தில் திடீர் என ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தின் தலைநகரான சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி நேற்று அ.தி.மு.க.இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு சென்று வந்தபோது அவர்களை வழி மறித்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ராஜகோபுரம் முன்பு இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்ஜோதி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் என்.ஆர். சிவபதி, அண்ணாவி, கே.கே.பாலசுப்பிரமணியன், வளர்மதி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் செல்வராஜ், இந்திரா காந்தி, பரமேஸ்வரி முருகன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநி இணை செயலாளர் பொன். செல்வராஜ், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் அறிவழகன் விஜய், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான்,ஒன்றியச் செயலாளர்கள் முத்துக்கருப்பன், அழகேசன், பகுதி செயலாளர்கள் டைமண்ட் திருப்பதி, சுந்தர்ராஜ் மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
the future of ai in healthcare