/* */

திருச்சி தரை கடைகளில் திருடிய 3 சிறுவர்கள் கைது

திருச்சி தரைக்கடைகளில் திருடிய 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்

HIGHLIGHTS

திருச்சி தரை கடைகளில் திருடிய 3 சிறுவர்கள் கைது
X

திருச்சி உறையூர் நவாப்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கமால் பாரூக் (வயது 26). இவர் திருச்சி என்.எஸ்.பி. ரோட்டில் தெப்பகுளம் அருகில் தரைக்கடை போட்டு துணி வியாபாரம் செய்து வருகிறார். இந்த பகுதியில் கடை போடும் வியாபாரிகள் அனைவரும் இரவு நேரத்தில் கடையை பாதுகாப்பு கருதி தார்பாய் சீட் போட்டு கட்டிவைத்து விட்டு செய்வது வழக்கம்.

ஆனால் இந்த பகுதியில் உள்ள தரைக்கடைகளில் அடிக்கடி, கட்டை அவிழ்த்து இரவு நேரங்களில் மர்ம ஆசாமிகள் துணிகளை திருடிக் கொண்டு சென்று விடுகின்றனர் என்று வியாபாரிகள் தரப்பில் நீண்ட நாட்களாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இதில் பல லட்சம் அளவில் துணிகள் திருடியுள்ளதாக வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதே போல நேற்று இரவு அனைவரும் கடையை கட்டி வைத்து விட்டு சென்ற பிறகு, அந்த கடைகளில் இருந்து டவுன் ஸ்டேஷன், மூவேந்தர்நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 15, 16, 17 வயதுடைய 3 சிறுவர்கள் அதிகாலை 2 மணியளவில் துணிகளை திருடிய போது கையும் களவுமாக வியாபாரிகள் பிடித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

இதனிடையே கமால்பாரூக் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன், சப்-இன்ஸ்பெக்டர் மல்லிகா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 Sep 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’