திருச்சி ஸ்ரீரங்கத்தில் புகையிலை பொருள் விற்பனை செய்த டீ கடைக்கு சீல்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் புகையிலை பொருள் விற்பனை செய்த  டீ கடைக்கு சீல்
X
திருச்சி ஸ்ரீரங்கத்தில் புகையிலை பொருள் விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் புகையிலை பொருள் விற்பனை செய்த டீ கடைக்கு உணவு பாதுகாப்பு துறையினர் சீல் வைத்தனர்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில் ஸ்ரீரங்கத்தில் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி ரமேஷ் பாபு தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் ஒரு டீக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. ஏற்கனவே இந்த கடையில் 2 முறை புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக மீண்டும் புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டதால் உணவு பாதுகாப்பு துறை ஆணையரின் உத்தரவுபடி இன்று கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

இது குறித்து பேசிய அதிகாரி ரமேஷ் பாபு, புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோருக்கு தொடர்ந்து அபராதம் விதிக்கப்படுகிறது. மீண்டும், மீண்டும் விற்பனையில் ஈடுபடும் கடைகள் சீல் வைக்கப்படும். திருச்சி மாவட்டத்தில் இதுவரை சுமார் ரூ.7 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!