சேற்றில் குளித்து கும்மாளமிட்ட திருவானைக்காவல் கோயில் யானை அகிலா
Thiruvanaikaval Temple Elephant-திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் இறை பணியாற்றி வரும் யானை அகிலாவிற்கு ஏற்கனவே குளிப்பதற்காக நீச்சல்குளம் கட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில் வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப் படியும், இந்து சமய அறநிலைத்துறை அறிவுறுத்தலின்படியும் கோயிலில் உள்ள நாச்சியார் தோப்பில் ஏற்கனவே இருந்து வரும் நீச்சல் குளம் அருகில் யானை அகிலா சேற்றில் குளிப்பதற்காக புதியதாக 1200 சதுரடியில் சேற்றுக் குளியல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.
இது ரூ.50 ஆயிரம் மதிப்பில் களிமண், செம்மண், மணல் ஆகியவை சுமார் ஒன்றரை அடி உயரம் கொட்டப்பட்டு உள்ளது. இதில் உப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. இன்று அந்த களிமண்ணில் நீர் நிரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து யானை அகிலா அந்த சேற்று குளத்திற்குள் இறக்கப்பட்டது. இந்த சேற்று குளியலை கண்டவுடன் மகிழ்ச்சி அடைந்த யானை அகிலா சேற்றுக்குள் தனது துதிக்கையால் அடித்து விளையாடி சேற்றை அள்ளி தன்மீது போட்டுக்கொண்டது.
எப்பொழுதும் யானைக்கு தண்ணீரைக் கண்டால் மகிழ்ச்சி தான் அதுவும் சேற்று தண்ணீர் என்றால் கூடுதல் மகிழ்ச்சி தான். இதில் யானை இறங்கிவிட்டால் மேலே ஏறவே மனம் வராமல் அவ்வளவு மகிழ்வுடன் குளியல் போட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu