/* */

திருவானைக்காவல் கோவில் அகிலா யானை புதிய குளியல் தொட்டியில் குளித்து குதுாகளிப்பு

திருச்சியில் தொடர்ந்து வெப்பம்நிலவி வருவதால் திருவானைக்காவலில் புதிதாக அமைக்கப்பட்ட குளியல் தொட்டியில் கோவில் யானை அகிலா குளித்து குதுாகளித்து மகிழ்ந்தது.

HIGHLIGHTS


திருச்சி:

திருச்சியில் தொடர்ந்து வெப்பம் நிலவி வருவதால் திருவானைக்காவலில் புதிதாக அமைக்கப்பட்ட குளியல் தொட்டியில் கோவில் யானை அகிலா குழந்தை போல் குளித்து குதுாகளித்து மகிழ்ந்தது.

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் அகிலா என்ற பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. கோவிலில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து விசேஷங்களிலும் அகிலா கலந்துகொள்ளும். பொதுவாக யானைகளுக்கு குளிப்பது என்றால் அலாதி பிரியம். தண்ணீரை பார்த்துவிட்டால் துள்ளி குதிக்க ஆரம்பித்து விடும்.

இந்த வகையில் ஸ்ரீரங்கம் கோவில் ஆண்டாள் யானைக்கு ஷவர் அமைக்கப்பட்டு தினனந்தோறும் குளித்து உடல்சுட்டை தணித்து வருகிறது. அதேபோல், திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் யானை அகிலா குளிக்க போதிய வசதிகள் இல்லாத நிலையில் புதிதாக சமீபத்தில் குளியல் தொட்டி அமைக்கப்பட்டது.

கோவில் வளாகத்தில் நாச்சியார் தோட்டம் அருகே 20 அடி நீளம் 20 அடி அகலத்தில் புதிதாக குளியல் தொட்டி கட்டப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த குளியல் தொட்டியில் நீர் நிரப்பி முதன்முதலாக யானை அகிலா குளித்தது. புதியமுறையில் குளிப்பதால் அகிலா யானை ஆனந்தத்துடன் அனுபவித்து குளித்து மகிழ்ந்தது.




Updated On: 24 Jun 2021 9:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்