ஸ்ரீரங்கத்தில் கோவில், வீடுகளில் கைவரிசை: கொள்ளையன் கைது

ஸ்ரீரங்கத்தில் கோவில், வீடுகளில் கைவரிசை: கொள்ளையன் கைது
X

கோப்பு படம்

திருச்சி அருகே, ஸ்ரீரங்கத்தில் கோவில் மற்றும் வீட்டில் திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாம்பழசாலையில், வீரமாகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை, வழக்கம் போல் இரவு பூட்டி விட்டு, பூசாரி வீட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள் காலை அவர் கோவிலை திறக்க வந்தபோது, கதவு திறந்து கிடந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர், ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

போலீசார் நடத்திய விசாரணையில், அம்மன் தாலிச்செயின் மற்றும் குத்துவிளக்கு உள்ளிட்ட பூஜை சாமான்களை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, கோவில் செயலாளர் ஜெய்சங்கர் கொடுத்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் இந்திரா காந்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்.

இதேபோல், திருவானைக்காவல் கொள்ளிடம் செக்போஸ்ட் அருகே உள்ள நேதாஜி நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 50). இவரது வீட்டை உடைத்து 3 பவுன் தங்கச் செயின், ஒரு பவுனில் இரண்டு மோதிரங்கள் மற்றும் பணம், கைகடிகாரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர். புகாரின் பேரில் வழக்கு பதிந்த ஸ்ரீரங்கம் போலீசார், கொள்ளையனை தேடி வந்தனர். விசாரணையின் முடிவில், இந்த இரு கொள்ளை சம்பவங்களிலும் தொடர்புடைய அபிமன்யுவை கைது செய்தனர். அவரிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags

Next Story
future ai robot technology