முக்கொம்பு கதவணை கட்டுமான பணியை மே மாதத்திற்குள் முடிக்க திட்டம்

முக்கொம்பு கதவணை கட்டுமான பணியை மே மாதத்திற்குள் முடிக்க திட்டம்
X

திருச்சி முக்கொம்பு புதிய கதவணை கட்டுமான பணியை கலெக்டர் சிவராசு இன்று ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டம் முக்கொம்பு சுற்றுலா தலத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த மிகவும் பழமையான அணை கடந்த 2018ம் ஆண்டு பலத்த மழையினால் அடித்து செல்லப்பட்டது.

இதற்கு பதிலாக அங்கு புதிய கதவணை ரூ.387கோடியில் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இப்பணியில் மொத்தம் உள்ள 488 பைல்கள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. கிட்டத்தட்ட 92 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் கட்டுமான பணியை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த பணிகள் அனைத்தும் வருகிற மே மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக கலெக்டர் அப்போது தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture