திருச்சி ஸ்ரீரங்கத்தில் ரயில் மறியல் போராட்டத்திற்கு வந்த கம்யூனிஸ்டு கட்சியினர்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் ரயில் போராட்டம் நடத்த வந்த போது போலீசாரை கண்டித்து தரையில் அமர்ந்தனர்.
பெட்ரோல் விலை, டீசல் விலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஆகியவற்றை குறைக்க வேண்டும், இந்தியை திணித்து தமிழு க்கு எதிராக செயல்படுவதை கைவிட வேண்டும், வேலையில்லா திண்டாட்டத்தை போக்க வேண்டும், சாதி, மத கலவரங்களை தூண்டி, மக்கள் ஒருமைப்பாட்டை குலைத்து, நாட்டை நாசமாக்கும் பாஜக அரசு, ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் இரண்டாவது நாளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.‘
இதன் ஒரு பகுதியாக முதல் நாள் போராட்டமான நேற்று, திருச்சி இரயில்வே சந்திப்பில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பத்மாவதி தலைமையில் போராட்டம் நடத்திய நூற்றுக்கு மேற்ப ட்டோர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.இரண்டாவது நாளான இன்று, திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் மறி யல் போராட்டம் சி.ஐ.டி.யூ. மாவட்ட பொதுச் செயலாளரும், திருச்சி மாநகராட்சி கவுன்சிலருமான சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
மறியல் போராட்டத்தில் பொதுச் செயலாளர் பார்வதி, மாவட்ட பொருளாளர் சண்முகம், தேசிய கட்டுப்பா ட்டு குழு செல்வராஜ், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் எஸ் சிவா பகுதி செயலாளர்கள் சுரேஷ் முத்துசாமி, அஞ்சுகம் செம்பட்டு ராஜா, அபுதாகிர் ,மாதர் சம்மேளன மாநகர தலைவர் ஆயிஷா, மாணவர் பெருமன்ற செயலாளர்கள் மற்றும் 100 -க்கும் மேற்ப ட்டோர் கலந்து கொண்டு கைதாகினர்.
அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்- தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu