திருச்சி ஸ்ரீரங்கத்தில் இளம்பெண் திடீர் மாயம்: போலீசார் விசாரணை

திருச்சி ஸ்ரீரங்கத்தில் இளம்பெண் திடீர் மாயம்: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

திருச்சியில் இளம்பெண் திடீரென மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் பகுதி பெரிய கருப்பூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மகள் இந்துமதி (வயது 21). இவர் திருச்சியில் உள்ள ஒரு நகைக் கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் வேலையை வேண்டாம் என, உரிமையாளரிடம் கூறிவிட்டு நகைக் கடையிலிருந்து வெளியேறியவர் அதன் பின்பு வீட்டுக்குத் திரும்பவில்லை. இதுகுறித்து அவரது சகோதரி கீர்த்திகா கோட்டை போலீசில் புகார் கொடுத்தார்.இந்த புகாரின் பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப்பதிவு செய்து இந்துமதியைத் தேடி வருகிறார்.

Tags

Next Story
ai in future agriculture