திருச்சி ஸ்ரீரங்கத்தில் பள்ளி இடம் மாற்றம் கண்டித்து மாணவ மாணவிகள் போராட்டம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினார்கள்.
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரில் அய்யனார் மாநகராட்சி உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 240 மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.மாணவர் சேர்க்கை குறைவு மற்றும் இட வசதி கருதி 6 ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரையிலான உயர் நிலைப்பள்ளியை மேலூரில் இருந்து ஸ்ரீரங்கத்துக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்நிலையில் இந்தப் பள்ளி இடமாற்றம் காரணமாக சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டி இருப்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்களும், பெற்றோர், மாணவர்களும் பலகட்ட போரா ட்டங்களையும் நடத்தினர்.இந்த நிலையில் மீண்டும் பள்ளி இடமாற்ற நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதனையடுத்து நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் இன்று வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப ட்டனர்.இதையடுத்து மாணவர்களுக்கு ஆதரவாக பொது மக்களும், பெற்றோர்களும் போராட்டக் களத்தில் குதித்தனர். இனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட கல்வி அலுவலர் விரைந்து சென்று சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதுடன் இடமாற்றம் செய்யப்படாது என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.மாணவர்கள் அமைதியாக மீண்டும் வகுப்புக்கு திரும்பினர்.
இது குறித்த அப்பகுதி மக்கள் கூறுகையில்,பள்ளிக்குத் தேவையான கூடுதல் கட்டிடங்கள் கட்ட ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறை இடம் தருவதாகதெரிவித்திருந்தது. ஆனால் அதிகாரிகள் அதனை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு பள்ளி இடமாற்றம் செய்வதிலேயே குறியாக உள்ளனர். எந்த காரணத்தை கொண்டும் பள்ளி இடமாற்றத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டோம்.அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். தற்போது மாவட்ட கல்வி அலுவலர் பள்ளி இடமாற்றம் செய்யப்படாது என உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் தற்போதுள்ள உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu