திருச்சி கொரோனா சிறப்பு மையத்தில் உணவு கேட்டு போராட்டம்

திருச்சி கொரோனா சிறப்பு மையத்தில் உணவு கேட்டு போராட்டம்
X
உணவு வழங்கவில்லை என போராட்டம்.

திருச்சி மாவட்டத்தில் சேதுராபட்டியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் உள்ளது. இதில் உணவு வழங்க வில்லை என்று கூறி நோயாளிகள் போராட்டம் நடத்தினர்.

திருச்சியில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் திருச்சி மருத்துவக் கல்லூரி மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ முகாம், காஜாமலை பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் மற்றும் சேதுராப்பட்டி பொறியியல் கல்லூரியிலும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம் செயல்பட்டு வருகிறது .

அதில் சேதுராப்பட்டி கோவிட் சிகிச்சை மையத்தில் உணவு வழங்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் அங்கு அளிக்கப்படும் உணவு தரமற்ற உணவாக இருக்கிறது என கொரோனா நோயாளிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!