திருச்சியை அடுத்த முத்தரச நல்லூர் அருகே மணல் திருடிய 2 பேர் கைது

திருச்சியை அடுத்த  முத்தரச நல்லூர்  அருகே மணல் திருடிய 2 பேர்  கைது
X
திருச்சியை அடுத்த முத்தரச நல்லூர் அருகே மணல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சியை அடுத்த முத்தரசநல்லூர் அருகே உள்ள எம்.கூடலூரை சேர்ந்தவர் கண்ணதாசன் . இவருடைய மகன் திவாகர் (வயது 26.) இவருடைய நண்பர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கலிங்கராஜ் மகன் விக்னேஷ் (வயது 22).

இவர்கள் இரண்டு பேரும் கூடலூர் ரெங்கா நகரில் பிக்கப் லோடு வேனில் மணல் அள்ளிகொண்டிருந்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு படை போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து ஜீயபுரம் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்