ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா: நாளை முகூர்த்தக்கால் நடும் வைபவம்

ஸ்ரீரங்கம்  வைகுந்த ஏகாதசி  விழா: நாளை   முகூர்த்தக்கால் நடும் வைபவம்
X

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் பரமபதவாசல், சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் (பைல் படம்)

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் வைபவம் நாளை நடைபெற உள்ளது.

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் வருகிற டிசம்பர் மாதம்3 -ந்தேதி முதல் 24-ந்தேதி வரைவைகுந்த ஏகாதசி திருவிழாநடைபெறுவதை முன்னிட்டு நாளை (10-ந்தேதி) புதன் கிழமை காலை 10.00 மணிக்கு மேல் - 11.00 மணிக்குள்வைகுந்த ஏகாதசிதிருவிழாவிற்கானமுகூர்த்தகால் நடும் வைபவம்ஆயிரங்கால் மண்டபம் அருகில் நடைபெற உள்ளது.இந்த நிகழ்ச்சிக்கு கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலை வகிக்கிறார்.

வைகுந்த ஏகாதசி திருவிழா அடுத்த மாதம் 3-ந்தேதியன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. 4-ந்தேதி முதல் 13-ந்தேதி வரைபகல் பத்து திருவிழாக்களும்,13-ந்தேதியன்று நம்பெருமாள்நாச்சியார் திருக்கோலமும்,முக்கியத் திருநாளான ஸ்ரீ நம்பெருமாள் இரத்தினங்கியுடன்பரமபத வாசல் திறப்பு 14-ந்தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு மேல்5.45 மணிக்குள்ளும் நடைபெறும்.

மேலும் 20-ந்தேதி நம்பெருமாள் கைத்தலசேவையும், 21-ந்தேதியன்று திருமங்கை மன்னன் வேடுபறிதிருவிழாவும், 23-ந்தேதியன்றுதீர்த்தவாரியும், 24-ந்தேதியன்றுஸ்ரீநம்மாழ்வார் மோட்சமும்நடைபெற உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!