ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்: வைகுந்த ஏகாதசி- பகல் பத்து 2-ம் நாள் உற்சவம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்: வைகுந்த ஏகாதசி- பகல் பத்து 2-ம் நாள் உற்சவம்
X

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுந்த ஏகாதசி விழாவின் இரண்டாம் நாளான இன்று நம்பெருமாள் சவுரி கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளினார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுந்த ஏகாதசி விழா பகல் பத்து 2-ம் நாளில் சவுரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுந்த ஏகாதசி விழாவை முன்னிட்டு பகல்பத்து 2-ம் நாளான இன்று சவுரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்தார்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் சொர்க்க வாசல் திறப்பு விழா வருகின்ற 14-ஆம் தேதி நடைபெற உள்ளது. திருநெடுந்தாண்டகத்துடன் இவ்விழா கடந்த 3-ம் தேதி தொடங்கியது.

பகல் பத்து நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று உற்சவர் நம்பெருமாள் கவரிமான் தொப்பாரைக் கொண்டை, தங்ககிளியுடன் இரத்தின அபயஹஸ்தம், கலிங்கதுரா, பவளமாலை, நெல்லிக்காய் மாலை, காசு மாலை, புஜ கீர்த்தி, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

தொடர்ந்து, பகல் பத்து 2- ஆம் நாளான இன்று நம்பெருமாள் சவுரிக் கொண்டை, வைர அபயஹஸ்தம், வைரகாதுகாப்பு, தங்ககிளி, நெல்லிக்காய் மாலை, பவள மாலை, தங்க பஞ்ஜாயுத மாலை, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.

பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்கருக்கு சேவை சாதிக்தார். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!