ஸ்ரீரங்கத்தில் பெண் ஓட்டிய மொபட்டுக்குள் புகுந்த பாம்பு

ஸ்ரீரங்கத்தில் பெண் ஓட்டிய மொபட்டுக்குள் புகுந்த பாம்பு
X
ஸ்ரீரங்கத்தில் மொபட்டில் புகுந்த பாம்பை பிடிக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர்
ஸ்ரீரங்கத்தில் பெண் ஓட்டிய மொபட்டுக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.

.ஸ்ரீரங்கம் தாலுகா ஏகிரி மங்கலத்தை சேர்ந்தவர் வாசுகி. இன்று இரவு இவர் உறவினரை பார்க்க ஸ்ரீரங்கம் வந்தார்.சுப்பிரமணியபுரம் பகுதியில் மொபட்டில் சென்ற போது வண்டியின் கண்ணாடி மீது பாம்பு நெளிந்து ஏறியுள்ளது. இதை கண்டு பீதியடைந்த வாசுகி உடனடியாக வண்டியை நிறுத்தி இறங்கினார்.

வண்டிக்குள் பாம்பு புகுந்து இருப்பது குறித்து அருகில் நின்றவர்களிடம் கூறினார். அப்போது அருகில் நின்றவர்கள் ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்க்கு தகவல் கொடுத்தனர்.

ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலை அலுவலர் சேகர், ஏட்டுகள் மூத்தையா , குணசேகரன் , தீயாமணி கண்டன் , சுரேஷ், பசுபதி ஆகியோர் விரைந்தனர். வண்டிக்குள் புகுந்த பாம்பை பிடிக்க முயற்சி செய்தனர்.

சுமார் 1 மணி நேரம் போராடி சுமார் ஒன்றரை அடி நீளம் உள்ள குட்டி பாம்பு ஒன்றை தீயணைப்புத்துறையினர் பிடித்தனர். கண்ணாடி விரியன் பாம்பு என்பது தெரியவந்தது. பெண் ஓட்டிவந்த மொபட்டில் பாம்பு புகுந்த சம்பவம் ஸ்ரீரங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai future project