ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் திருக்கைத்தல சேவை

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் திருக்கைத்தல சேவை
X

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் திருக்கைத்தல சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் திருக்கைத்தல சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் திருக்கைத்தல சேவை நிகழ்ச்ச்ி நடைபெற்றது. அப்போது உற்சவர் நம்பெருமாளை பட்டர்கள் கைகளில் ஏந்தி, எதிரில் நிற்கும் பக்தர்களுக்கும், பராங்குச நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி காத்திருக்கும் நம்மாழ்வாருக்கும் நன்கு தெரியும்படி காட்டுவார்கள். அர்ச்சகர்களின் கைகளில் இருந்து நம்பெருமாள் சேவை சாதிப்பதால், இந்த நிகழ்ச்சிக்கு திருக்கைத்தல சேவை என்று பெயர்.

திருக்கைத்தல சேவையையொட்டி மாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு பரமபதவாசலை கடந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு திருமாமணி மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு மாலை 5.30 மணி முதல் மாலை 6 மணிவரை திருக்கைத்தல சேவை (நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில்) நடைபெற்றது. மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணிவரை உபயகாரர் மரியாதையுடன் பொது ஜனசேவையும் நடைபெற்றது. இரவு 11 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் இரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!