ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று ராப்பத்து முதலாம் நாள் உற்சவம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று ராப்பத்து முதலாம் நாள் உற்சவம்
X

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் ்ராப்பத்து முதல் நாளான இன்று நம்பெருமாள் பாண்டியன் கொண்டை, கிளி மாலை அணிந்து எழுந்தருளினார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ராப்பத்து இன்று முதலாம் நாள் உற்சவம் தொடங்கியது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ராப்பத்து இன்று முதலாம் திருநாளையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு மேல் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு நடைபெற்றது. காலை 4.45 மணிக்கு நம்பெருமாள் பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசலில் எழுந்தருளினார்.

காலை 5 மணிக்கு திருக்கொட்டகை பிரவேசம் நடைபெற்றது. காலை 7.15 மணிக்கு நம்பெருமாள் சாதரா மரியாதை கண்டருளி, திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

காலை 7.15 மணி முதல் காலை 8.15 மணி வரைஅலங்காரம், அமுது செய்ய திரையும். மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை அரை யர் சேவையும். இரவு 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திருப் பாவாடை கோஷ்டி.

இரவு 8.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை வெள்ளி சம்பா அமுது செய்ய திரை. மற்றும் இரவு 12 மணி திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பாடு.

அதிகாலை 1.15 மணிக்கு (15-ந் தேதி) வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சேருதல்.

மூலஸ்தான சேவைக்கு காலை 7 மணி வரை பக்தர்கள் அனுமதி இல்லை. காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி உண்டு. இரவு 8 மணிக்குப்பிறகு மூலஸ்தான சேவை கிடையாது. பரமபத வாசல் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

Tags

Next Story
கீழாநெல்லி இலையை சாப்பிட்டால் உடம்பில் புதுவிதமான சக்தி கிடைக்குமா...? அப்படி  உடம்பில் என்னென்ன விஷயம் நடக்கும் பார்ப்போமா ...?