ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ரங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ரங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம்
X

சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் ரங்கநாச்சியார்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ரங்கநாச்சியார் நவராத்திரி உற்சவத்தின் ஐந்தாம் நிகழ்ச்சி இன்று நடந்தது.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் கடந்த ஆறாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த உற்சவத்தின் 5-ஆம் நாளான இன்று உற்சவர் ரெங்கநாச்சியார் ரத்தின கிரீடம், வைரத்தோடு, வைர அபயஹஸ்தம், பவள மாலை, அடுக்கு பதக்கம், முத்துச்சரம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!