ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்: வைர கிரீடம் அணிந்து எழுந்தருளினார் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்: வைர கிரீடம் அணிந்து எழுந்தருளினார் நம்பெருமாள்
X

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா இராப்பத்து ஐந்தாம் நாளில் வைரகீரிடம் அணிந்து எழுந்தருளினார் நம்பெருமாள்.

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் வைகுந்த ஏகாதசி 5-ஆம் நாளில் ஸ்ரீ நம்பெருமாள் வைரகிரீடம் அலங்காரத்தில் எழுந்தருளினார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இராப்பத்து உற்சவத்தின் 5-ம் நாளான நேற்று உற்சவர் நம்பெருமாள் வைர கிரீடம் (வைரமுடி), ரத்தின காதுகாப்பு, வைர அபயஹஸ்தம், வைர லட்சுமி டாலர், பவள மாலை, காசு மாலை, முத்துமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள்அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பரமபதவாசலை கடந்து ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் வரிசையாக வந்த நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
smart agriculture iot ai