ஸ்ரீரங்கம் கோவில் தாயார் சன்னதியிலும் நீர்மோர் வழங்கும் பணி துவக்கம்

ஸ்ரீரங்கம் கோவில் தாயார் சன்னதியிலும் நீர்மோர் வழங்கும் பணி துவக்கம்
X
ஸ்ரீரங்கம் ரங்கநாதர்கோவில் தாயார் சன்னதியில் நீர்மோர் வழங்கும் பணியை இணை ஆணையர் மாரிமுத்து துவக்கி வைத்தார்.
ஸ்ரீரங்கம் கோவில் தாயார் சன்னதியிலும் நீர்மோர் வழங்கும் பணி இன்று துவக்கி வைக்கப்பட்டது.

கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமிகோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடந்த ஒரு மாதமாக பெரிய பெருமாள் சன்னதி கொடிமரம் அருகில் தினசரி சுமார் 5000 பேர் பக்தர்களுக்கு மூலிகை நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது. இது பக்தர்களிடம் அதிக வரவேற்பை பெற்றதையடுத்து இன்று முதல் ஸ்ரீ தாயார் சன்னதியிலும் பக்தர்களுக்கு மூலிகை நீர்மோரினை கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து , உதவி ஆணையர் கந்தசாமி ஆகியோர் வழங்கி துவக்கி வைத்தனர்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை-  நிறுவனங்களுக்கு அறிவுரை