கட்டணமில்லா மொட்டை- அரசு அறிவிப்பை அமல்படுத்தியது ஸ்ரீரங்கம் கோவில்

கட்டணமில்லா மொட்டை- அரசு அறிவிப்பை அமல்படுத்தியது ஸ்ரீரங்கம் கோவில்
X
ஸ்ரீரங்கம் கோவில் சார்பில் திருச்சி காவிரி கரையில் வைக்கப்பட்டுள்ள பேனர்
முடி காணிக்கை செலுத்த கட்டணம் வசூலிக்க கூடாது என்ற அரசின் அறிவிப்பை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அமல்படுத்தி உள்ளது

இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த கட்டணம் கொடுக்க வேண்டியது இல்லை. என்ற அறிவிப்பை தமிழக சட்டமன்றத்தில் நேற்று இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்து உள்ளது. பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலின் அனைத்து வாயில்களிலும் அரசின் அறிவிப்பை சுட்டிக்காட்டி பேனர்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

காவிரி கரையில் உள்ள அம்மா மண்டபம் படித்துறையிலும் இந்த பேனர் கட்டப்பட்டு உள்ளது. இங்கு தான் அதிக அளவில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் அறிவிப்பை உடனடியாக அமல்படுத்திய ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் நிர்வாகத்திற்கு பக்தர்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து உள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture